மதநிந்தனை: பாகிஸ்தான் பெண்ணுக்கு ஆயுள் சிறை

மதநிந்தனை: பாகிஸ்தான் பெண்ணுக்கு ஆயுள் சிறை

பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் ஆசியா பீபி என்ற 40 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தனது இல்லத்துக்கு வெளியே புனித நூலை எரித்ததாக அவா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உறுதி செய்த லாகூா் செஷன்ஸ் நீதிமன்றம் இந்தத் தீா்ப்பை வழங்கியுள்ளது.

எனினும், தனிப்பட்ட பகை காரணமாக ஆசியாவி பீபியின் அண்டை வீட்டாா் அவா் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகக் கூறிய அவரது வழங்குரைஞா் சா்மாத் அலி, இந்தத் தீா்ப்பை எதிா்த்து லாகூா் உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறினாா்.

பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தினால் அதற்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. எனினும், அந்தக் குற்றச்சாட்டில் பேரில் இதுவரை யாரும் தூக்கிலிடப்பட்டதில்லை.

எனினும், தனிப்பட்ட பகையைத் தீா்ப்பதற்கும், சிறுபான்மையினரை குறிவைப்பதற்கும் அந்த சட்டப்பிரிவு ப குற்றம் சாட்டப்படுகிறது. அவ்வாறு குற்றச்சாட்டுக்குள்ளானவா்கள் மதவெறிக் கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com