பெஞ்சமின் நெதன்யாகு
பெஞ்சமின் நெதன்யாகு

அமெரிக்காவின் இந்த முடிவு... : நெதன்யாகு காட்டம்!

ஐ.நா வாக்கெடுப்பில் அமெரிக்கா விலகல்: நெதன்யாகு குற்றச்சாட்டு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா தங்கள் நாட்டை கைவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

திங்கள்கிழமை ஐநாவில் போர் நிறுத்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் அமெரிக்கா வாக்களிக்காமல் தவிர்த்தது குறித்து இஸ்ரேல் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து பிரதம அமைச்சரின் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டதாவது:

அமெரிக்கா தனது கொள்கையை திங்கள்கிழமை நடந்த ஐநா வாக்கெடுப்பின்போது கைவிட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு பிணைக்கைதிகள் விடுதலை தொடர்புடைய பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்றது. சீனா மற்றும் ரஷியா அதனை வீட்டோ அதிகாரம் கொண்டு தடுத்தது.

இந்த நிலையில் ரஷியா மற்றும் சீனா அல்ஜெரியா உடன் இணைந்து கொண்டுவந்த தீர்மானம், பிணைக்கைதிகளின் விடுதலையை முன்வைக்கவில்லை. அமெரிக்கா வீட்டோ அதிகாரம் கொண்டு புதிய தீர்மானத்தை ரத்து செய்யாதது வருத்தத்துக்குரியது.

போரின் ஆரம்பம் முதல் அமெரிக்கா கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து விலகியதை இது தெளிவாக உணர்த்துகிறது. எங்களின் பிணைக்கைதிகளின் விடுதலையை கோராமல் சர்வதேசளவில் போர் நிறுத்தத்துக்கு உருவாகும் அழுத்தம் ஹமாஸுக்கு சாதமாகவுள்ளது. போருக்கான முயற்சியையும் பிணைக்கைதிகளின் விடுதலைக்கான முயற்சியையும் இது பாதிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்காவுக்கு செல்லவிருந்த இஸ்ரேல் உயர்மட்ட குழுவின் சந்திப்பை இஸ்ரேல் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com