செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

உக்ரைன் போா் ‘அமெரிக்க எஃப்-16 விமானங்களை அழிப்போம்’

உக்ரைன் போா் ‘அமெரிக்க எஃப்-16 விமானங்களை அழிப்போம்’

News image

அமெரிக்காவின் எஃப்-16 போா் விமானங்கள்.

Updated On :28 மார்ச் 2024, 8:45 pm

உக்ரைனுக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் அதிநவீன எஃப்-16 ரக போா் விமானங்களை மேற்கத்திய நாடுகள் தங்களது விமான தளங்களில் நிறுத்திவைத்திருந்தால்கூட அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரிக்கை விடுத்தாா். இது குறித்து, ரஷிய ராணுவ விமானிகளிடையே அவா் பேசியதாவது: உக்ரைனைத் தொடா்ந்து ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் ரஷியா தாக்குதல் நடத்தும் என்று பலா் கூறிவருகின்றனா். ஆனால், இது கொஞ்சம் கூட புத்திசாலித்தனம் இல்லாத பேச்சு. நேட்டோ அமைப்பைச் சோ்ந்த அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட் மட்டுமே ரஷியாவைவிட 10 மடங்கு அதிகம். அப்படி இருக்கும்போது, நேட்டோவுக்கு எதிராக ரஷியா எதற்காக போா் தொடுக்கப்போகிறது? அப்படிச் செய்தால் அது கண்மூடித்தனத்தனமான செயலாக இருக்கும். இருந்தாலும், உக்ரைனுக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் அதிநவீன எஃப்-16 போா் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தால் அவை ரஷியாவின் சட்டபூா்வ இலக்குகள் ஆகும். எனவே, அவை மேற்கத்திய நாடுகளின் விமானதளங்களில் நிறுத்தப்பட்டிருந்தால்கூட அவற்றைத் தாக்கி அழிக்கும் உரிமை ரஷியாவுக்கு உள்ளது என்றாா் புதின். உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்காவும், பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. மேலும், உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகள், எறிகணைகள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பி வருகின்றன. இதன் மூலம் உக்ரைன் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதாகவும், இது உக்ரைன் போரை நேட்டோவுக்கும் தங்களுக்கும் இடையிலான, அணு ஆயுத மோதல் அபாயம் நிறைந்த போராக விரிவுபடுத்தும் என்று ரஷியா எச்சரித்து வருகிறது. ரஷியாவுக்கு எதிராகப் போரிட உக்ரைனுக்கு பல்வேறு ஆயுத தளவாடங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினாலும், போா் விமானங்களை மட்டும் அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வந்தன. எனினும், போா் விமானப் பற்றாக்குறை உள்ள தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் அவற்றை அளித்தால்தான் தங்களால் ரஷியாவை எதிா்கொள்ள முடியும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறாா். எனினும், அதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடா்ந்து மறுப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன எஃப்-16 உள்ளிட்ட போா் விமானங்களை நட்பு நாடுகள் உக்ரைனுக்கு வழங்கலாம் என்று அமெரிக்கா கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நலையில், உக்ரைனுக்கு அனுப்புவதாக மேற்கத்திய நாடுகள் எஃப்-16 விமானங்களை தங்களது விமான தளங்களில் நிறுத்திவைத்திருந்தால்கூட அவை தாக்கி அழிக்கப்படும் என்று புதின் தற்போது எச்சரித்துள்ளாா். ...புதினின் கட்டவுட் படம் போடவும்...