ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் வெள்ளிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


காபூல்: ஆப்கானிஸ்தானில் மீண்டும் வெள்ளிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்எஸ்சி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.11 மணிக்கு (இந்திய நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் அட்சரேகை 36.04, தீா்க்கரேகை 71.19-இல் பூமிக்கு 110 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
முன்னதாக, வியாழக்கிழமை அதிகாலை 5.44 மணியளவில் நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் அட்சரேகை 36.36 மற்றும் தீர்க்கரேகை 71.18 இல் பூமிக்கு 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...