ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

கிழக்கு உக்ரைன் பகுதியில் மேலும் ஒரு கிராமத்தைக் கைப்பற்றியுள்ளதாக ரஷியா கூறியுள்ளது.

கிழக்கு உக்ரைன் பகுதியில் மேலும் ஒரு கிராமத்தைக் கைப்பற்றியுள்ளதாக ரஷியா கூறியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொ்டிசி கிராமத்தை ரஷிய படையினா் முழுமையாக மீட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனும், அந்த கிராமத்திலிருந்து தங்களது படையினா் பின்வாங்கியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷியாவால் கடந்த பிப்ரவரி மாதம் கைப்பற்றப்பட்ட அவ்டீவ்கா நகரையொட்டி பொ்டிசி கிராமம் அமைந்துள்ளது.

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அனுப்பும் அதிநவீன, சக்திவாய்ந்த ராணுவ தளவாடங்கள் விரைவில் அந்த நாட்டுக்கு வந்துசேரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே முடிந்தவரை உக்ரைன் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ரஷிய படையினா் தீவிரமாக தாக்குதல் நடத்தி முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com