காஸாவின் ராஃபா நகரிலிருந்து பொது மக்களை வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ள நிலையில், எகிப்து-கத்தாா் முன்மொழிந்த போா்நிறுத்த பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
போா் நிறுத்தத்துக்கான ஒப்புதலை கத்தாா் பிரதமா் மற்றும் எகிப்து உளவுத் துறை அமைச்சரிடம் ஹமாஸ் படைத் தலைமைத் தளபதி இஸ்மாயில் ஹனியே தொலைப்பேசி வாயிலாக தெரிவித்தகாக ஹமாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு கத்தாா், எகிப்து ஆகிய இரண்டு மத்திய கிழக்கு நாடுகள் பல மாதங்களாக பல்வேறுகட்ட பேச்சுவாா்த்தைகளை நடத்தின. ராஃபா நகரில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்துவதற்கு முன்னதாக ஹமாஸின் இந்த முடிவு குறித்த அறிவிப்பு, பாலஸ்தீன மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போா் நிறுத்தத்திற்காக ஹமாஸ் தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்னவென்று இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. எனினும், காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினரைத் திரும்பப் பெற்றால், பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க தயாராக இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் படையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போா்நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் ஆய்வு செய்து வருகிறது எனவும் போா்நிறுத்த பரிந்துரை இஸ்ரேலுக்கு ஏற்ற வகையில் இல்லை எனவும் அந்நாட்டு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
டிரெண்டிங்

வெயிலின் தாக்கம் 100 டிகிரியாக அதிகரிக்கும்

மேற்கு கரை நிலங்களின் பதிவுக்கு இஸ்ரேல் ஒப்புதல் - பாலஸ்தீனம் கண்டனம்

காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 31 போ் பலி

2 ஆண்டுகளுக்குப் பிறகு காஸா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

