பாகிஸ்தான்: சவூதி பட்டத்து இளவரசா் வருகை திடீா் ஒத்திவைப்பு


சவூதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானின் (படம்) பாகிஸ்தான் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுடன் வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக அந்த நாட்டுக்கு முகமது பின் சல்மான் இந்த மாதம் 19-ஆம் தேதி வருவதாக இருந்தது. மேலும், அங்கு 2 நாள்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் சல்மான் திட்டமிட்டிருந்தாா்.
இந்த நிலையில், இளவரசா் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக சவூதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது. எனினும், இதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...