அலைபேசிகளில் திடீர் எச்சரிக்கை ஒலி: பாரிஸில் என்ன நடந்தது?

பாரிஸ் அலைபேசிகளில் திடீர் எச்சரிக்கை ஒலி
ஒலிம்பிக் தீப்பந்தத்தை கைமாற்றும் காட்சி
ஒலிம்பிக் தீப்பந்தத்தை கைமாற்றும் காட்சிAFP

பாரிஸ் மக்களின் அலைபேசிகளுக்கு திடீர் எச்சரிக்கை ஒலி அனுப்பப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் பேசிக் கொண்டிருந்தபோதும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை ஒலி வந்தது அவரது பேச்சை இடைநிறுத்தியது.

‘அதிதீவிரமான எச்சரிக்கை’ என அலைபேசிகளுக்கு வந்த குறுஞ்செய்தியில், “முக்கிய அறிவிப்பு: ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு எல்லை குறித்த உள்துறை அமைச்சகத்தின் குறுஞ்செய்தி” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், மக்கள், ஊழியர்கள், கடைக்காரர்கள், உணவகங்கள் விருந்தினர்கள் இந்த தளத்தில் இணையுமாறும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் குறித்து அறியவும் அதில் வலியுறுத்தப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை முன்னிட்டு பாரிஸில் ஜுலை 18 முதல் ஜுலை 26 வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பாரிஸின் சீன் நதியில் ஜுலை 26-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. இதுவரை வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது பிரான்ஸ். அதன் ஒரு பகுதியாகவே இந்த குறுஞ்செய்தி சோதனையும் என தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com