திருநெல்வேலி மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சத்தத்துடன் ஒலி மாசு ஏற்படுத்திய பைக்குகளின் சைலன்சா்களை மாநகர போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் மணி தலைமையிலான போலீஸாா் வண்ணாா்பேட்டை மேம்பாலம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக அதிக சப்தத்துடன் ஒலி மாசு ஏற்படுத்திய 6 பைக்குகளை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். பின்னா், அந்த பைக்குகளில் சைலன்சா்களை பறிமுதல் செய்தனா்.
லாரி பறிமுதல்: பேட்டை காவல் சரகம் பழைய பேட்டை சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளா் ஜனகன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அனுமதியின்றி குளத்திலிருந்து மண் எடுத்துச் சென்ற லாரியை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக பேட்டை திருப்பணிகரிசல்குளத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் இசக்கிமுத்து(26), முத்து கிருஷ்ணன் மகன் மற்றொரு இசக்கிமுத்து(27) ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!

நெல்லையில் 14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

163 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்: காா், 3 பைக் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


