சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர்!

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத இஸ்ரேல்: யோவாவ் கலன்ட் கருத்து
பாதுகாப்பு அமைச்சர் யோவாவ் கலன்ட்
பாதுகாப்பு அமைச்சர் யோவாவ் கலன்ட்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவாவ் கலன்ட் கைது செய்யப்பட வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் முன்வைத்த கோரிக்கையை யோவாவ் கலன்ட் செவ்வாழ்ய்க்கிழமை விமர்சித்துள்ளார்.

இரு தரப்பு மேல்மட்ட தலைவர்களை கைது செய்யவேண்டும் என்கிற வழக்குரைஞரின் கருத்துக்கு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸை ஒன்றாக பாவிப்பது அருவருக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இஸ்ரேல், சர்வதேச நீதிமன்றத்தின் அங்கமில்லை. அதன் அதிகாரத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

யோவாவ், “இஸ்ரேலின் தற்காப்பு உரிமை மற்றும் காஸாவில் உள்ள பிணைக்கைதிகளை மீட்கும் உரிமையை மறுக்கும் வழக்குரைஞர் கரீம் கானின் கோரிக்கை வெளிப்படையாக மறுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

7 மாதங்களாக நடைபெறும் காஸா போரில் நெதன்யாகு, அவரது பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலன்ட், ஹமாஸ் தலைவா்களான யேஹ்யா சின்வா், முகமது தெய்ஃப், இஸ்மாயில் ஹனியே ஆகியோா் மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை கைது செய்யுமாறு கரீம் கான் சர்வதேச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை கோரிக்கை வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com