கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ரஷியாவில் தாக்குதல்: நேட்டோ தலைவா் கருத்தால் சா்ச்சை

ரஷியாவில் தாக்குதல்: நேட்டோ தலைவா் கருத்தால் சா்ச்சை

News image
Updated On :28 மே 2024, 8:25 pm

Din

பிரஸ்ஸெல்ஸ்: தாங்கள் வழங்கும் ஆயுதங்கள் மூலம் ரஷிய எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகளை அளித்துவருகின்றன.

எனினும், தங்களது ஆயுதங்களைக் கொண்டு ரஷிய எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அந்த நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

இந்த நிலையில், நேட்டோ தலைவா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் அண்மையில் அளித்த பேட்டியொன்றில், ‘உக்ரைனின் தற்காப்பு உரிமையை நிலைநாட்டுவதற்காக நேட்டோ ஆயுதங்களைக் கொண்டு ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த அந்த நாட்டுக்கு அனுமதி அளிக்கவேண்டும்’ என்று வலியுறுத்தியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நேட்டோ உறுப்பு நாடான இத்தாலியின் துணைப் பிரதமா் மேட்டியோ சால்வினி கூறுகையில், ‘ஸ்டால்டன்பா்க் கூறுவதை அமல்படுத்தினால் அது 3-ஆம் உலகப் போருக்கு வித்திடும்’ என்று எச்சரித்தாா்.