பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் 5 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் பலி
பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 5 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.

Photo credit: AP

Photo credit: AP
பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 5 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெள்ளிக்கிழமை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் உட்பட 8 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் கருவி மூலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நேரத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்களும் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.
நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் அருகே போலீஸ் வாகனம் வந்தபோது குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் பள்ளி வாகனமும் சிக்கியது. இந்த சம்பவத்தில் போலீஸ் வாகனம் மற்றும் பல ஆட்டோ ரிக்ஷாக்களும் சேதமடைந்தன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து பலூச் இன பயங்கரவாதிகளும் தலிபான் பயங்கரவாதிகளும் அடிக்கடி தாக்குல் நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...