பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வரலாற்று வெற்றி: டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:43 am

DIN

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற எனது நண்பர் டிரம்ப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

​​இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய மற்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்கியுள்ளேன்.

மக்களின் முன்னேற்றம், உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து பாடுபடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக்கு அருகில் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகமான ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மொத்தமுள்ள 50 மாகாணங்களில் கிட்டத்திட்ட 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

ஏ.பி. செய்தி நிறுவன தகவலின்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 267 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 214 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.