
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகவிருக்கும் நிலையில், ஏராளமான அமெரிக்கர்கள் வெளிநாடுகள் வேலை தேடத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில், கூகுள் எனும் தேடுபொறியில், கனடாவுக்குச் செல்ல என்று தேடும் மக்களின் எண்ணிக்கை 1,270 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூகுள் தரவு தெரிவிக்கிறது.
இதுபோலவே, நியூ சிலாந்துக்குச் செல்ல என்பதை கூகுளில் தேடுபவர்களின் எண்ணிக்கை 2,000 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஆஸ்திரேலியா செல்வது குறித்து தேடுபவர்களின் எண்ணிக்கை 820 சதவீதம் அதிகரித்திருப்பதகாவும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்ல, புதன்கிழமை மாலைக்குப் பிறகு, அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து கூகுளில் தேடியவர்கள், இந்த மூன்று நாடுகளின் குடியேற்ற விதிகளை தேடுவது இதுவரை வரலாறு காணாத வகையில் அதிகரித்திருக்கிறது என்றும் கூகுள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு பேர் குடியேற்ற விதிகளை தேடியிருக்கிறார்கள் என்ற தகவலை வெளியிடாதபோதும், நியூ ஸிலாந்து நாட்டின் குடியேற்றம் தொடர்பான இணையதளத்தில், அமெரிக்காவிலிருந்து ஒரே நாளில் 25,000 பேர் நவ.7ஆம் தேதி இணையதளத்தைப் பார்வையிட்டுள்ளனர் என்றும், இதே நாளில் கடநத் ஆண்டு இந்த எண்ணிக்கை 1,500 ஆக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோல, சில குடியேற்ற விவகாரங்களை கவனிக்கும் வழக்குரைஞர்களையும் பலர் தொடர்புகொண்டு சந்தேகங்களையும் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற போது எடுத்த சில பல நடவடிக்கைகள் காரணமாக, பல அமெரிக்கர்கள் வெளிநாடுகளில் வேலைத் தேடத் தொடங்கியிருப்பதையே இந்த தரவுகள் காட்டுகின்றன.
பல ஆண்டு காலமாக அமெரிக்காவில் வாழும் மக்களுமே, அமெரிக்க ஜனநாயகம் என்பது அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்று அச்சப்படுவதாகவும், இனி, மத, இன, பாலின பாகுபாடு தொடர்பான சம்பவங்கள் அதிகரிக்கும் என்றும் கவலைகொள்வதாகவும் மக்கள் கூறியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.