
தீபாவளி விருந்தில் ஹிந்துக்களுக்கு மது, மாமிசம் வழங்கியதாக பிரிட்டன் பிரதமர் மீது பிரிட்டிஷ் ஹிந்து பண்டிதர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த மாதம் தீபாவளியையொட்டி, பிரிட்டனில் அக்டோபர் 31 ஆம் தேதியில் பிரதமர் விருந்து மாளிகையில் (10, டௌனிங் ஸ்ட்ரீட்) பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தின்போது விளக்கேற்றுதல், நடன நிகழ்ச்சிகள், பிரதமரின் உரையும் நடத்தப்படும். இந்த விருந்தில் ஹிந்துத்துவ தலைவர்கள் உள்பட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஹிந்து பண்டிகை விருந்தில் மதுவும் மாமிசமும் அளிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு உணவு அட்டவணையில் மட்டன், பீர், ஒயின் முதலானவை இருந்ததாக சில பிரிட்டிஷ் ஹிந்துக்கள் கூறினர். கடந்தாண்டில், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அளித்த விருந்தில் மதுவோ மாமிசமோ இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஹிந்து விருந்தில் மது, மாமிசம் அளிக்கப்பட்டதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை, முக்கிய பிரிட்டிஷ் ஹிந்து பண்டிதரான சதீஷ் கே ஷர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
சதீஷ் கே ஷர்மா, தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, ``கடந்த 14 ஆண்டுகளாக, விருந்து மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்தில் மதுவோ மாமிசமோ இல்லை. ஆனால், இந்தாண்டு கொண்டாட்டம், மதுவும் மாமிசமும் ஆதிக்கம் செலுத்தும் நிகழ்வாக இருந்தது ஏமாற்றமளிக்கிறது.
மது, மாமிசத்தால் புனிதக் கொண்டாட்டமே பாதித்து விட்டது. இந்த சம்பவம் கவனக்குறைவு என்றால் சோகமளிக்கக் கூடியதாக உள்ளது; வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருந்தால், அது இன்னும் அதிகப்படியான சோகத்தை ஏற்படுத்தும்.
ஏனெனில், விருந்தில் மது, மாமிசம் அளிப்பதன்மூலம் பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கு பிரதமர் ஏதோ சொல்ல விரும்புகிறார் என்றுதான் தோன்றும்’’ என்று கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து 10, டௌனிங் ஸ்ட்ரீட் இதுவரையில் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதையும் படிக்க: அதானியைக் காப்பாற்றுவதில்தான் மோடி பிஸி! ராகுல் கண்டனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.