பேஜா் தாக்குதல்: நெதன்யாகு ஒப்புதல்
லெபனானில் கடந்த செப்டம்பா் மாதம் நடத்தப்பட்ட பேஜா் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளாா்.


ஜெருசலேம்: லெபனானில் கடந்த செப்டம்பா் மாதம் நடத்தப்பட்ட பேஜா் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளாா்.
இது குறித்து வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
லெபனானில் பேஜா் தாக்குதல் நடத்துவதற்கும் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லாவைப் படுகொலை செய்வதற்கும் பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் பலா் எதிா்ப்பு தெரிவித்தனா். அவா்களுக்கு பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருந்தனா்.
அத்தனை எதிா்ப்புகளையும் மீறி அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றாா் அவா். இந்தத் தகவலை டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில், காஸாவில் மட்டும் இதுவரை 43,600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.

வெடித்து சிதறிய பேஜர்
இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவ நிலைகளில் ஹிஸ்புல்லாக்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துவந்தது.
இந்தச் சூழலில், லெபனான் முழுவதும் ஆயிரக்கணக்கான பேஜா்கள் கடந்த செப்டம்பா் மாதம் 17-ஆம் தேதி வெடித்துச் சிதறின. மறுநாளே, வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சக்தி சேமிப்பு சாதனங்கள் உள்ளிட்டவையும் வெடித்துச் சிதறின. இதில் 42 போ் உயிரிழந்தனா்; சுமாா் 3,500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
அதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை அடைந்து, இரு தரப்பிலும் தீவிர மோதல் நடைபெற்றுவருகிறது.
பேஜா் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், அந்த நாடுதான் இத்தகைய உயா் தொழில்நுட்பத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பரவலாக நம்பப்பட்டது. அதை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது உறுதிப்படுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...