
சியோல்(தென் கொரியா): வட கொரியா தன் நெருங்கிய நட்பு நாடான ரஷியாவுக்கு ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், வட கொரிய ராணுவத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் வடக்கு எல்லையையொட்டிய குர்ஸ்க் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள, வட கொரிய படைகள் தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய உளவு முகமை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷிய படைகளுடன் இணைந்து, வட கொரிய படைகளும் இப்போது போரிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இந்த தகவலை தென் கொரிய தரப்பும் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: எல்லைப் பகுதியில் 7,000 வட கொரிய வீரா்கள்: உக்ரைன் உளவு அமைப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.