கிழக்கு உகாண்டாவில் உள்ள 6 கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40 வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதுகுறித்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள உகாண்டா செஞ்சிலுவைச் சங்கத்தினர் கூறுகையில், “மண்ணில் புதைந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது” என்றனர்.
மண்ணில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 பேர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உகாண்டாவில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கமானது. ஆனால், புதன்கிழமை இரவு பெய்த கடுமையான மழையின் காரணமாக புலம்புலி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதிநவீன புல்டோசர் வாகனம் கொண்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலச்சரில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து: 9 பேர் பலி!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



