உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு மார்க் ஸக்கர்பெர்க் முன்னேறினார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அறிக்கையின்படி, மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உலகின் இரண்டாவது பணக்காரராக உயர்ந்தார். 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மெட்டாவின் பங்குகள் எதிர்பார்த்ததைவிட 23 சதவிகிதம் உயர்ந்துள்ளன; அவரது நிகர மதிப்பு 206.2 டாலராக உயர்ந்துள்ளது.
இதன்மூலம், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸைவிட 1.1 பில்லியன் டாலர் அதிகம் பெற்று, அவரை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது பணக்காரராக மார்க் ஸக்கர்பெர்க் வியாழக்கிழமையில் முன்னேறினார். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் மெட்டாவின் பங்குகள் 70 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு முதலீடுகள்தான், மெட்டாவின் விற்பனை வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்று மெட்டா பலமுறை கூறியுள்ளது. மேலும், செலவுக் குறைப்பு திட்டத்திற்காக 2022 ஆம் ஆண்டில் 21000 பணியாளர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்தது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
மார்க் ஸக்கர்பெர்க்கை காட்டிலும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 50 பில்லியன் டாலருடன் முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

மெட்டா நிறுவனத்தில் 700 ஊழியர்கள் பணிநீக்கம்!
மார்க் ஜுக்கர்பெக்கை முந்திய சூர்யா மிதா!

காலத்தின் கட்டாயம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


