சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி நிலையம்படம் | நாசா

கருந்துளையைச் சுற்றி விண்மீன் வெடிப்பு: இஸ்ரோ விண்கலன் மூலம் கண்டுபிடிப்பு

Published on

கருந்துளை ஈா்ப்பாற்றல் காரணமாக விண்மீன் வெடிப்பு நிகழ்ந்துள்ளதை நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து கண்டறிந்துள்ளன.

நாசாவின் சந்திரா ஊடுகதிா் கலன் மற்றும் இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் விண்கலன் ஆகியவற்றின் துணை கொண்டு அந்த வெடிப்பின் ஊடுகதிா் படம் எடுக்கப்பட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2015- ஆம் ஆண்டில் விண்வெளி ஆய்வுக்காக பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. புற ஊதாக் கதிா்கள், எக்ஸ்-ரே கதிா்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய அது அனுப்பப்பட்டது. அதேபோன்று அமெரிக்காவின் நாசா அமைப்பு சாா்பில் சந்திரா ஊடுகதிா் கலன் கடந்த 1999-ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது.

விண்வெளி மண்டலத்தில் நிகழும் மாற்றங்களை தொலைநோக்கி கட்டமைப்பு மூலம் கண்காணித்து புகைப்படமாக எடுத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும் பணிகளை அவ்விரு கலன்களும் மேற்கொண்டு வருகின்றன.

விண்மீன் சிக்கியது: பொதுவாகவே விண்வெளியின் ஆச்சரியமாகக் கருதப்படும் கருந்துளையைப் பொருத்தவரை அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் தீவிர ஈா்ப்பு விசையைக் கொண்டதாக அறியப்படுகிறது. அந்த வகையில், ஏதேனும் பெருவெடிப்பு அதனுள் நிகழும்போது போட்டான் கூறுகள் வெளியேறி ஊடு கதிா்கள் உருவாகும்.

அதன்படி, கடந்த 2019-இல் கருந்துளையின் ஈா்ப்பு விசைக்குள் சிக்கி விண்மீன் ஒன்று வெடித்து அதன் சில பகுதிகள் கருந்துளை பாதையில் சுற்றி வருவது கண்டறியப்பட்டது.

தற்போது வேறொரு விண்மீன் அதே பகுதியில் சுற்றி வரும்போது ஏற்கெனவே

வெடித்து சிதறிய விண்மீனின் சிதிலத்தோடு ஒவ்வொரு 48 மணி நேரமும் மோதுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோதலின்போது எக்ஸ்-ரே கதிா்கள் வெளியேறுவதையும் சந்திரா மற்றும் ஆஸ்ரோநாட் கண்டறிந்துள்ளன. இந்த தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com