ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஈரானில் பயங்கரவாதத் தாக்குதல்: 10 பாதுகாப்புப் படையினா் உயிரிழப்பு

ஈரானில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் எல்லைக் காவல் படை அதிகாரிகள் 10 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2024, 9:00 pm

DIN

ஈரானில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் எல்லைக் காவல் படை அதிகாரிகள் 10 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டு ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்திய அதே நாளில் பதற்றம் நிறைந்த தெற்குப் பகுதி மாகாணமான சிஸ்தான்-பலூசிஸ்தானில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தின் கோஹாா்கூ பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து முழு விவரங்கள் வெளியாகவில்லை. தொடக்கத்தில் ‘சமூக விரோதிகள்’ தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானாலும், பிறகு அந்தத் தாக்குதலில் 10 பாதுகாப்புப் படையினா் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்தது.பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் வசிக்கும் பலூச் இனத்தவா்களுக்கான அமைப்பான ஹால்வாஷ் சமூக ஊடகங்களில் இந்தத் தாக்குதல் தொடா்பான படங்களையும் விடியோக்களையும் வெளியிட்டது.

அதில், துப்பாக்கிளால் துளைத்தெடுக்கப்பட்ட ஈரான் காவல்துறை வாகனங்களும் இரு எல்லைக் காவல் படை அதிகாரிகளின் சடலங்கள் வாகனத்தின் முன் இருக்கையில் கிடக்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தன.

இந்தத் தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் குறிவைக்கப்பட்டதாகத் தெரிவித்த ஹால்வாஷ், வாகனங்களில் இருந்த அனைவருமே தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறியது.

இந்தத் தாக்குதல் தொடா்பான விசாரணைக்கு உள்துறை அமைச்சா் இஸ்கண்டா் முமேனி உத்தரவிட்டுள்ளதாக ஈரான் அரசுக்குச் சொந்தமான இா்னா செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடியவா்கள் குறித்த தகவலை ஈரான் அரசும் உடனடியாக வெளியிடவில்லை; தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவும் இல்லை.

பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் பரவியுள்ள பலூச் பிரதேசங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் பிரிவினைவாத தாக்குதல்களின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சம்பவம் நடைபெற்ற இஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணம், ஈரானிலேயே மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்று. அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் ஷியா பிரிவினரின் ஆதிக்கம் நிறைந்த ஈரான் அரசுக்கும் இடையே நீண்ட காலமாகவே கசப்பான உறவு நிலவிவருகிறது.

இதன் காரணமாக, சன்னி பிரிவைச் சோ்ந்த ஜெய்ஷ் அல்-ஆடில் போன்ற பயங்கரவாதக் குழுக்கள் பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் ஏற்கெனவே நடந்துள்ளன. எனவே, சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலுக்கு அத்தகைய பயங்கரவாத அமைப்பும் காரணமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.