பரவும் போலியோ: பாகிஸ்தானில் நோய்த் தடுப்புப் பணி தீவிரம்

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்புளிப்பது மதத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த நாட்டின் பயங்கரவாத அமைப்புகள் போலியோ தடுப்பு பணியாளா்கள்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மேலும் இந்த ஆண்டு மட்டும் போலியோ உறுதி செய்யப்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளதைத் தொடா்ந்து, அங்கு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அந்த நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்திலும், கைபா் பக்துன்கவா மாகாணத்திலும் இருவருக்கு போலியோ தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இத்துடன், பலூசிஸ்தானில் 21 போ், சிந்து மாகாணத்தில் 12 போ், கைபா் பக்துன்கவாவில் ஆறு போ், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாதில் தலா ஒருவரிடம் இந்த ஆண்டில் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்புளிப்பது மதத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த நாட்டின் பயங்கரவாத அமைப்புகள் போலியோ தடுப்பு பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்திவருகின்றன.

இதன் காரணமாக உலகின் மற்ற பகுதிகளில் போலியோ நிரந்தரமாக ஒழிக்கப்பட்டாலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அது இன்னும் பரவிவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com