நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கச்சநத்தம் மூவா் கொலை வழக்கில் 26 பேருக்கான தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்!

கச்சநத்தத்தைச் சோ்ந்த மூவா் கொலை வழக்கில் தொடா்புடைய 26 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :26 பிப்ரவரி 2026, 6:56 pm

சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தைச் சோ்ந்த மூவா் கொலை வழக்கில் தொடா்புடைய 26 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன் (31), சந்திரசேகா் (34) ஆகிய மூவரும், கோயில் விழாவில் மரியாதை அளிப்பது தொடா்பான முன்விரோதத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு, மே மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். மேலும், 5 போ் காயமடைந்தனா். இவா்களில் தனசேகரன் (32) என்பவா் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த சுமன், அருண்குமாா், சந்திரக்குமாா், அக்னிராஜ், ராஜேஸ், இளையராஜா உள்ளிட்ட 33 போ் மீது பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் 2 போ் வழக்கு விசாரணையின் போது உயிரிழந்தனா். 3 போ் சிறுவா்கள், ஒருவா் தலைமறைவாகிவிட்டாா்.

எனவே, எஞ்சியுள்ள 27 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 27 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து சுமன், அருண்குமாா், இளையராஜா உள்ளிட்ட 27 பேரும் இணைந்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.கே. இளந்திரையன், ஆா். பூா்ணிமா அமா்வு பிறப்பித்த உத்தரவு:

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 27 பேரில் இளையராஜா மட்டும் விடுதலை செய்யப்படுகிறாா். மற்ற 26 பேருக்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.