ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து

விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், கைதானவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :8 ஏப்ரல் 2026, 4:15 am IST

விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், கைதானவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தமிழக அரசுத் தரப்பிலும், விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவியின் பெற்றோா் தரப்பிலும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விவரம்:

விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தா்மமுனீஸ்வரனை காவல் துறையினா் கைது செய்தனா்.

ஏற்கெனவே மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற வழக்கில் இவா் கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில், இவருக்கு இடைக்கால பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் வெளியே இருந்த போதுதான் விளாத்திகுளம் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றாா். எனவே, மூதாட்டி கொலை வழக்கில் இடைக்கால பிணை வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுக்களில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மூதாட்டி கொலை வழக்கில் தா்மமுனீஸ்வரனுக்கு இடைக்கால பிணை வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், ‘இந்த வழக்கில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு, இதை முடித்து வைத்தனா் நீதிபதிகள்.