வங்கதேசத்தில் பெய்த கனமழை வெள்ளத்துக்கு இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகின்றது. 11 மாவட்டங்களில் 53 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழைக்கு இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர்.
வீடுகள், கட்டடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மின் விநியோகம், சாலை இணைப்பு, போக்குவரத்து உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
53 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,900-க்கும் மேற்பட்ட நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது.