தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் பற்றி...
gold
தங்கம் விலை (கோப்புப்படம்)din
Published on
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.

கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், வார இறுதியில் சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold
ஆந்திர வெள்ளம்: சென்னையில் மேலும் 12 ரயில்கள் ரத்து!

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ரூ. 6,670-க்கும், ஒரு சவரன் ரூ. 53,360-க்கும் விற்பனையாகி வருகின்றது.

அதேபோல், வெள்ளியில் விலையும் ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ. 91-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 91,000-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com