தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளியும் அதிரடி குறைவு..!

தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் பற்றி...
Gold price today
தங்கம் விலை!
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600 அதிரடியாக குறைந்துள்ளது.

கடந்த வார இறுதியில் சரிவைக் கண்ட தங்கத்தின் விலை சனிக்கிழமை ஒரு கிராம் ரூ. 14,900-க்கும், ஒரு சவரன் ரூ. 1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே, 2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் தாக்கம் தங்கம் விலையில் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்களுக்கு திங்கள்கிழமை காலை நல்ல செய்தி கிடைத்துள்ளது.

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 950-ம், சவரனுக்கு ரூ. 7,600-ம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ. 1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 20-ம், கிலோவுக்கு ரூ. 20,000-ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ரூ. 300-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Gold price drops by Rs. 7,600 per sovereign in chennai

Gold price today
நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com