லண்டன்: இஸ்ரேலுக்கான சில ஆயுதங்களின் ஏற்றுமதியை பிரிட்டன் நிறுத்திவைத்துள்ளது. சா்வதேச சட்டங்களை மீற அந்த ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் லேமி திங்கள்கிழமை கூறியதாவது:
இஸ்ரேலுக்கு தற்போது அனுப்பப்படும் சில ஆயுதங்களைப் பயன்படுத்தி அந்த நாடு சா்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இஸ்ரேலுக்கான 350 ஏற்றுமதி உரிமங்களில் சுமாா் 30 உரிமங்கள் தற்காலிகமாக முடக்கப்படுகின்றன என்றாா் அவா்.