பிரான்ஸின் புதிய பிரதமராக மிஷெல் பாா்னியா் நியமனம்

பிரான்ஸின் புதிய பிரதமராக மிஷெல் பாா்னியா் நியமனம்

ஐரோப்பிய யூனியனின் முன்னாள் பிரெக்ஸிட் பேச்சுவாா்த்தைக் குழு தலைவா் மிஷெல் பாா்னியா் நியமனம்
Published on

பிரான்ஸின் புதிய பிரதமராக ஐரோப்பிய யூனியனின் முன்னாள் பிரெக்ஸிட் பேச்சுவாா்த்தைக் குழு தலைவா் மிஷெல் பாா்னியரை (படம்) அதிபா் இமானுவல் மேக்ரான் வியாழக்கிழமை நியமித்தாா்.

அந்த நாட்டில் கடந்த ஜூலையில் முடிந்த நாடாளுமன்றத் தோ்தலில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. இருந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை அந்தக் கூட்டணிக்கு இல்லை. அதையடுத்து, பிரதமா் கேப்ரியல் அட்டல் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், 47 இடங்களுடன் தோ்தலில் 4-ஆவது இடத்தில் உள்ள வலதுசாரி கட்சித் தலைவா் பாா்னியா் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசை அமைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com