கமலா ஹாரிஸ்தான் வெல்வார்: பிரபல தேர்தல் கணிப்பாளர் தகவல்

10 தேர்தல்களில் 9 தேர்தல்களின் முடிவுகளை சரியாக சொன்ன கணிப்பாளர் ஆலன் லிச்மேன் பேச்சு
டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் (கோப்புப் படம்)
டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

வருகிற நவம்பர் மாத அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்தான் வெற்றி பெறுவார் என்று பிரபல தேர்தல் கணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த 2016 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்பின் வெற்றி மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஜோ பைடனின் வெற்றி ஆகிய இரண்டையும், ஆலன் லிச்மேன் துல்லியமாக கணித்திருந்தார்.

இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தனது போட்டியாளரான குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்பை தோற்கடிப்பார் என்று ஆலன் கணித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் (கோப்புப் படம்)
பள்ளிகளில் நிகழ்ச்சிக்கு புதிய வழிமுறைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஆலனின் கணிப்பு, கடந்த 10 அமெரிக்க அதிபர் தேர்தல்களில் 9 தேர்தல்களில் உண்மையாகியுள்ளது. 2000 ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ்ஷை, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அல் கோர் தோற்கடிப்பார் என்று அவர் கணித்தது மட்டுமே தவறிப்போனது.

இதுதவிர, ஜனநாயகக் கட்சிக்கு தனது தனிப்பட்ட ஆதரவை, ஆலன் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதியில், டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான அதிபர் விவாதம் நடக்கவுள்ள நிலையில், ஆலனின் அதிபர் கணிப்பு அமெரிக்க அரசியலில் பேசுபொருளாகி வருகிறது.

எதுவாயிருந்தாலும், நவம்பர் 5 ஆம் தேதியில் அமெரிக்கர்கள் வாக்களிக்கும்போது பதில் வெளிப்பட்டு விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com