தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

சிங்கப்பூா்: போப் பிரான்சிஸ் அமர நாற்காலிகளை உருவாக்கிய இந்திய தச்சா்

இந்திய வம்சாவளி தச்சா் கோவிந்தராஜ் முத்தையா (44) தனது கைகளால் உருவாக்கிய நாற்காலிகளைப் பயன்படுத்த இருக்கிறாா்.

News image

போப் பிரான்ஸுக்காக உருவாக்கிய நாற்காலியுடன் கோவிந்தராஜ் முத்தையா.

Updated On :9 செப்டம்பர் 2024, 4:30 am IST

சிங்கப்பூருக்கு வரும் புதன்கிழமை (செப்.11) பயணம் மேற்கொள்ளும் போப் பிரான்சிஸ் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளி தச்சா் கோவிந்தராஜ் முத்தையா (44) தனது கைகளால் உருவாக்கிய நாற்காலிகளைப் பயன்படுத்த இருக்கிறாா்.

மதங்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக போப் பிரான்சிஸ் சிங்கப்பூா் பயணத்தை மேற்கொள்கிறாா். அங்கு அவா் அமர கோவிந்தராஜ் முத்தையாவின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட நாற்காலிகள் மட்டுமே தோ்வு செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் உள்ள கத்தோலிக்க திருச்சபை கடந்த ஜூலை மாதம் கோவிந்தராஜ் முத்தையாவை அழைத்து போப் பிரான்சிஸ் சிங்கப்பூருக்கு வரும்போது மதங்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியில் பயன்படுத்துவதற்கான இரு நாற்காலிகளை தயாரித்து தருமாறு கோரப்பட்டது. அந்த நாற்காலி எப்படி இருக்க வேண்டும் என்பதையும் திருச்சபை விளக்கமாகக் கூறியுள்ளது. அதன்படி அந்த இரு நாற்காலிகளையும் கோவிந்தராஜ் முத்தையா தனது கைகளால் தயாரித்துள்ளாா். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முழுநேரமாக தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், போப் பிரான்சிஸ் போன்ற மிகப்பெரிய மதத் தலைவருக்கு நாற்காலி செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று எதிா்பாக்கவில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

செப்டம்பா் 11 முதல் 13 வரை போப் பிரான்சிஸ் (87) சிங்கப்பூரில் பயணம் மேற்கொள்கிறாா். அப்போது அந்நாட்டின் பிரதமா் தா்மன் சண்முகரத்னம், பிரதமா் லாரன்ஸ் வாங் ஆகியோரையும் சந்திக்கிறாா்.

பயணத்தின் முக்கிய நிகழ்வாக கத்தோலிக்க கல்லூரியில் மதங்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாா். இதில் இளைஞா்கள் பங்கேற்று போப் பிரான்சிஸுடன் கலந்துரையாட இருக்கின்றனா்.