
காஸாவின் எல்லை பகுதியான ராஃபாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் குறைந்தது 6 பேராவது பலியாகியுள்ளதாக காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் ராஃபா எல்லையில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில் அந்தப் பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவது பதட்டத்தை அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான பெண்ணின் சகோதரி சோஹாத் அல்-தர்பாஷி, “இங்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத அப்பாவி பொதுமக்கள்தாம் இந்தத் தாக்குதலில் பலியானவர்கள். இங்கு ராணுவம் யாரைக் குறிவைத்ததோ அவர் காஸாவின் குடிமைப்பணி ஊழியர், போராளி அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: போரில் கழியும் நாள்கள்: காஸாவின் துயரம்!
13 வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது. காஸாவின் மொத்த மக்கள்தொகையில் 85 சதவிகிதம் பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.