கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஹமாஸ் தளபதிகள் கொலை!: இஸ்ரேல் ராணுவம்

கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

கோப்புப்படம்.

Published On :

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் மூன்றாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

கான் யூனிஸ் நகரத்தின் தெற்குப்பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் கட்டிடங்களில் நடத்திய வான்தாக்குதலில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.  

ஹமாஸ் அமைப்பின் நுக்பா பிரிவின் தளபதி அந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கான் யூனிஸில் சோதனையில் ஈடுபட்ட மற்றொரு இஸ்ரேல் ராணுவக்குழு ஹமாஸின் ஆயுதக் கிடங்கை அழித்ததாகத் தெரிவித்துள்ளது. அந்த கிடங்கில் ஏகே - 47 மற்றும் ஆர்பிஜி ரக ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மத்திய காஸாவில் மகாசி நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதில் 7 பேர் நுக்பா பிரிவின் தளபதிகள் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மகாசியில் இஸ்ரேல் ராணுவத்தினரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இரண்டு தீவிரவாதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,139 பேரைக் கொலை செய்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த மூன்று மாதங்களாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. இதுவரை 23,000த்திற்கு அதிகமான மக்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.