டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

24 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை

பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கையை காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

News image
கட்டட இடிபாடுகளிடையே தேடுதல் பணியில் பாலஸ்தீனர் | AP
Updated On :15 ஜனவரி 2024, 11:21 am

DIN

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 100-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் காஸா மருத்துவமனைகளுக்கு தாக்குதலில் பலியான 132 பேரில் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தது.

காஸா பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் 33 பேர் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் பலியாகினர்.

இஸ்ரேல் ராணுவத்தின் வாகனம் | AP

இஸ்ரேல் ராணுவத்தின் வாகனம் | AP

மேலும் 252 காயமுற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் ஹமாஸ் போராளிகள் என அமைச்சகத்தால் பிரித்து சொல்லப்படவில்லை.

போரில் ஏறத்தாழ 8 ஆயிரம் ஹமாஸ் போராளிகள் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 24,100 ஆக உயர்ந்துள்ளது. 60,834 பேர் காயமுற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.