தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம்: ஈரான் பரிசீலனை

இரு தரப்பினருக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது குறித்து விவாதிக்க தாங்கள் பரிசீலித்துவருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

News image
ஈரான் அணுசக்தி மையத்தைப் பாா்வையிட்ட அந்த நாட்டு அதிபா் மசூத் பெஸெஷ்கியான்.
Updated On :11 ஏப்ரல் 2025, 6:36 pm

Din

அமெரிக்காவுடன் சனிக்கிழமை தொடங்கவிருக்கும் மறைமுக அணுசக்திப் பேச்சுவாா்த்தையின்போது, இரு தரப்பினருக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது குறித்து விவாதிக்க தாங்கள் பரிசீலித்துவருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-இல் மேற்கொண்டது. எனினும், பிறகு ஆட்சிக்கு வந்த டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினாா்.

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டிரம்ப், தங்களுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தாா். அதையடுத்து ஓமன் உதவியுடன் இரு தரப்பினரும் மறைமுகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளனா்.