
இந்தியா மீது அடுத்த 24 மணிநேரத்திற்குள் கூடுதலாக வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா ஒரு சிறந்த வணிக பங்குதாரர் அல்ல என்றும், இந்தியாவுடன் மிகச்சிறிய அளவே வணிகத்தை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சர்வதேச ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்தியா மீதான வரி குறித்து டிரம்ப் பேசியதாவது,
இந்தியா பற்றி மக்கள் கூற விரும்பாதது, அவர்கள் அதிக வரி விதிக்கும் நாடு. மற்றவர்களை விட இந்தியா அதிக வரிகளைக் கொண்டுள்ளது. அதிக வரி விதிப்பதால், இந்தியாவுடன் நாங்கள் மிக மிகச் சிறிய அளவிலேயே வர்த்தகம் செய்துள்ளோம்.
இந்தியா ஒரு சிறந்த வணிக பங்குதாரர் அல்ல; அவர்கள் எங்களுடன் அதிக வணிகம் செய்கின்றனர். ஆனால், அந்த அளவு இந்தியாவுடன் நாங்கள் வணிகத் தொடர்பு வைத்திருக்கவில்லை. அதனால், இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்க முடிவு செய்துள்ளோம். இந்தநிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் மிக கணிசமாக வரியை உயர்த்தலாம் என நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
இந்தியா மீது 25% வரி
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது அதிக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். ரஷியாவில் இருந்து அதிக அளவு இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அந்தப் பணம் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படுவதாகவும், இதைப்பற்றி இந்தியா கவலைகொள்ளவில்லை எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதையும் படிக்க | அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.