ரஷியாவின் ஒரே ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷியா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ரஷியாவின் ஒற்றை ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் ஒரென்பர்க் பகுதியிலுள்ள, அந்நாட்டின் ஒற்றை ஹீலியம் உற்பத்தி ஆலையின் மீது, நேற்று (ஆக.11) உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹீலியம் ஆலையைச் சுற்றியிலும், ஏராளமான ட்ரோன்கள் பறந்ததை அங்கு வசிக்கும் மக்கள் நேரில் பார்த்ததாகக் கூறப்படும் நிலையில், அப்பகுதியில் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரஷியாவின் விமானப் படையினர் நடத்திய பதில் தாக்குதல்களில், உக்ரைனின் 36 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

ராக்கெட், விண்வெளி மற்றும் விமான தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஹீலியம் வாயு போர் தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் ராணுவத் தளவாடங்களின் உற்பத்திக்கும் மிகவும் அவசியமான ஒன்றெனக் கூறப்படுகிறது.

இத்துடன், ரஷிய பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி ஒருவரைக் குறிவைத்து உக்ரைன் நடத்த முயன்ற பயங்கரவாதத் தாக்குதலை, அந்நாட்டு அதிகாரிகள் தகர்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக, ரஷியா மற்றும் உக்ரைனின் குடியுரிமைப் பெற்ற நபர் ஒருவர், வீட்டிலேயே தயாரித்த சுமார் 60 கிலோ அளவிலான வெடிகுண்டை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 50% வரி.. இந்தியாவை கிண்டலடிப்பதா? கொந்தளித்த இலங்கை எம்.பி.

Summary

Ukraine has reportedly attacked Russia's only helium plant with drones.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com