
எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷியாவுக்குச் சொந்தமான சரக்கு ரயில் மீது உக்ரைன் இன்று (ஆக. 19) தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ரயில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால், எரிபொருள் வீணாகியதாகவும், தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் - ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ரஷிய அதிபர் விளாதீமிர் புதினை சந்தித்துப் பேசினார்.
தொடர்ச்சியாக ஐரோப்பிய தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
உலக நாடுகளிடையே சமீபகாலமாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவந்ததைப்போன்று, ரஷியா - உக்ரைன் இடையிலான போரையும் முடிவுக்கு கொண்டுவருவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதனிடையே, தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோரோஜியா மாகாணத்திற்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷியாவுக்குச் சொந்தமான சரக்கு ரயில் மீது உக்ரைன் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ரயில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதில், தண்டவாளங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால், அந்த வழியாக ரஷியாவுக்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜபோரோஜியா வழியாக இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க |உக்ரைன் விவகாரம்: 30 கூட்டணி நாடுகள் முக்கிய ஆலோசனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.