இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது!

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டது பற்றி...
Sri Lankan former President Ranil Wickremesinghe
ரணில் விக்ரமசிங்க
Published on
Updated on
1 min read

அரசு நிதியை சொந்த காரணங்களுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இலங்கை அதிபராக இருந்தபோது அரசு நிதியில் சொந்தமாக பயணங்கள் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சம்மன் வழங்கிய நிலையில், அவர் கொழும்புவில் சிஐடி(CID) அதிகாரிகள் முன்பு இன்று ஆஜரானார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரணில் விக்ரமசிங்க உடனடியாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் இன்று(வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ரணில் விக்ரமசிங்க சென்றுள்ளார். இதற்காக இலங்கை அரசின் நிதியில் இருந்து ரூ. 1.7 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக ரணில் விக்ரமசிங்க உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Former Sri Lankan president Ranil Wickremesinghe arrested over misuse of funds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com