
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவியும் அடுத்த பட்டத்து இளவரசியுமான கேத் மிடில்டன், பொன்னிற தலைமுடியுடன் பல்மோரல் அருகே தென்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 24ஆம் தேதி பல்மோரல் அருகே, அவர் இளவரசர் வில்லியம்ஸுடன் செல்லும் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை தேவாலய பிரார்த்தனைக்காக கேத் மிடில்டன், கணவர் வில்லியம்ஸ் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வந்திருந்தபோதுதான் அவரை மக்கள் பார்த்துள்ளனர். பலரும் அவரைப் பார்த்ததுமே, அவரது பொன்னிற தலைமுடியைத்தான் கவனித்தனர்.
இந்த மாற்றம் திடீரென ஏற்பட்டுவிடவில்லை. கடந்த ஆண்டு, கேத் மிடில்டன் தலைமுடி இளம் கருப்பு நிறத்திலிருந்து சற்று வெளிர் நிறத்துக்கு மாறத் தொடங்கியிருந்தது. அண்மையில் ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின்போது கேத் மிடில்டன் தலைமுடி மேலும் வெளிர்த்துக் காணப்பட்டது.
ஆனால், தற்போது அவர் வெளியே வந்தபோது, பொன்னிறத்தில் தலைமுடி இருந்ததைப் பார்த்ததும் மக்கள் அதனை கவனிக்கத் தவறவில்லை.
நவீன அலங்கார நிபுணர்கள் பலரும், தலைமுடிதான் பல விஷயங்களுக்கும் சமிக்ஞை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். புற்றுநோய் பாதித்து மிக நீண்ட கால சிகிச்சையில் இருந்து வந்த கேத் மிடில்டன், புதிய தோற்றத்துடன் வெளியே வந்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் நலமாக இருப்பதையும் சிகிச்சையின் பயனாக நோயிலிருந்து மீண்டு வந்திருப்பதையுமே இந்த தோற்றம் காட்டுவதாக மக்கள் நம்புகிறார்கள்.
பொது வெளியில் வந்திருப்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. குடும்பத்தோடு அவர் தேவாலயம் வந்து சென்றிருக்கிறார். அவர்களுடன் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் தேவாலயம் வந்திருந்தனர்.
பிரிட்டன் மக்கள் பலரும், எப்போதும் இளவரசி கேத் மிடில்டன் இருக்கும் நவ நாகரீகங்களைப் பின்பற்ற மாட்டார். அவரது தோற்றத்துக்கு ஏற்ப புதிய நவ நாகரீக மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று பேசிக் கொள்கிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.