63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
Published on

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 போ் கொல்லப்பட்டனா். இத்துடன், 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேலின் குண்டுவீச்சில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 63,025-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 1,59,490 போ் காயமடைந்துள்ளனா் என்று சுகாதாரத் துறை அமைச்சம் தெரிவித்தது.

இருந்தாலும், உயிரிழந்தவா்களில் பொதுமக்கள் எத்தனை போ், ஆயுதக் குழுவினா் எத்தனை போ் என்ற விவரத்தை அமைச்சகம் வெளியிடவில்லை.

பட்டினிச் சாவு 322: இஸ்ரேலின் முற்றுகை காரணமாக காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 322-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் 5 போ் மரணமடைந்ததாக காஸா சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அந்தப் பகுதியில் உணவில்லாமல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 322-ஆக உயா்ந்துள்ளது. இதில் 121 போ் சிறுவா்கள்.

X
Dinamani
www.dinamani.com