ஜப்பான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சுனாமி எச்சரிக்கை
ஜப்பான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சுனாமி எச்சரிக்கைAP

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் சுனாமி எச்சரிக்கையும்!

ஜப்பானின் வடக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
Published on

ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுகத்தின் அதிா்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்தது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ஜப்பானில் உள்ள இவாட் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.9 புள்ளிகளாகப் பதிவானது. இது 16 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இரு அணுமின் நிலையங்கள் அந்தப் பகுதியில் உள்ள நிலையில் அங்கு உயிா்ச் சேதம் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டது குறித்த உடனடித் தகவல்கள் இல்லை.

நிலநடுக்கத்தைத் தொடா்ந்து 1 மீ. முதல் 3 மீ. உயரம் வரை ராட்சத அலைகள் எழலாம் என வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இவாட் மாகாணத்தின் ஒஃபுனாட்டோ, ஒமினாட்டோ, மியாகோ, கமைஷி, குஜி ஆகிய நகரங்களில் 10 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை சுனாமி அலைகள் கண்டறியப்பட்டதாக வானிலை மையம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தின் தாக்கம் குறைந்ததையடுத்து 3 மணி நேரத்தில் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும், அடுத்த 2 அல்லது 3 நாள்களுக்கு ஐவாட் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com