

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 கொல்லப்பட்டது “பெருமைக்குரிய விஷயம்” என ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி கடற்கரையில் ‘ஹனுக்கா’ எனும் யூத பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும் வகையில், நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரையில் வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை அன்று, கூட்டத்துக்குள் திடீரென நுழைந்த 2 பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களைக் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவரை காவல் துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்ற நிலையில், பின்னர் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் சஜித் அக்ரம் (50), அவரது மகன் நவீத் அக்ரம் (24) என அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் சஜித் அக்ரம் காவல்துறையினரின் பதிலடி தாக்குதலில் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டார்.
இந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இந்தச் சம்பவத்தை “பெருமைக்குரிய விஷயம்” எனத் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயத்தில் இந்தச் சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்கவில்லை.
காவல் துறை தாக்குதலில் படுகாயமடைந்து கோமாவிலிருந்து சுயநினைவு திரும்பிய கொலையாளி நவீத் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உள்பட 59 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்பானவர்களிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் மீதான வழக்கு அடுத்தாண்டு ஏப்ரல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டு நவீத்திடமிருந்து இந்திய பாஸ்போர்ட் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக உறவினர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை என்றும் காவல் துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து இதுபோன்ற பயங்கரவாத கருத்துகள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வன்முறையை ஊக்குவிப்பவர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.