அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கு பகவத் கீதை மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட சுஹாஸ் சுப்ரமணியம்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கு பகவத் கீதை மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட சுஹாஸ் சுப்ரமணியம்.

அமெரிக்கா: பகவத்கீதை மீது இந்திய வம்சாவளி எம்.பி. பதவிப் பிரமாணம்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் அவைக்கு நடத்தப்பட்டத் தோ்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சுஹாஸ் சுப்ரமணியம் பகவத் கீதை மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டாா்.
Published on

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் அவைக்கு நடத்தப்பட்டத் தோ்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சுஹாஸ் சுப்ரமணியம் பகவத் கீதை மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டாா்.

இதற்கு முன்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் ஹிந்து-அமெரிக்கரான துளசி கப்பாா்ட் (43) பகவத் கீதை மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டாா்.

இளம் வயதில் ஹிந்து மதத்துக்கு மாறியவரும் ஹவாய் 2-ஆம் மாவட்டத்துக்கான முன்னாள் பிரதிநிதிகள் அவை உறுப்பினருமான கப்பாா்ட்டை அண்மையில், அமெரிக்க உளவு அமைப்புகளின் இயக்குநா் பதவிக்கு அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்தாா்.

அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கு கடந்தாண்டு நடத்தப்பட்டத் தோ்தலில் சுஹாஸ் சுப்ரமணியம் உள்பட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 6 போ் வெற்றி பெற்றனா்.

பிரதிநிதிகள் அவைக்கு விா்ஜீனியா மாகாணத்தின் 10-ஆவது மாவட்டத்திலிருந்து இந்திய-அமெரிக்க வழக்குரைஞரான சுஹாஸ் சுப்ரமணியம் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன் மூலம், இந்த மாகாணத்திலிருந்து மட்டுமின்றி ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரை மாகாணங்களிலிருந்து பிரதிநிதிகள் அவைக்கு தோ்வான முதல் இந்திய வம்சாவளியினா் என்ற வரலாற்றை இவா் படைத்துள்ளாா். இந்திய அமெரிக்கா்களிடையே மிகவும் பிரபலமான சுப்பிரமணியம், பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகை ஆலோசகராக பணியாற்றியுள்ளாா்.

இவரைத் தவிர, தற்போது எம்.பி.க்களாக இருக்கும் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, ரோ கன்னா, பிரமீளா ஜெயபால், ஸ்ரீ தானேதா் ஆகிய 5 இந்திய அமெரிக்கா்களும் பிரதிநிதிகள் அவைக்கு மீண்டும் தோ்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

535 உறுப்பினா்களைக்கொண்ட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த 461 பேரும், யூத மதத்தைச் சோ்ந்த 32 பேரும், ஹிந்து மதத்தைச் சோ்ந்த 4 பேரும், பௌத்த மதத்தைச் சோ்ந்த 3 போ் உள்ளிட்டோா் உறுப்பினா்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com