சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மரணத்திலிருந்து தப்பினோம்.. ஷேக் ஹசீனா பரபரப்பு தகவல்

சில நிமிடங்களில் மரணத்திலிருந்து தப்பினோம் என்று ஷேக் ஹசீனா தகவல்

News image
ஷேக் ஹசீனா
Updated On :18 ஜனவரி 2025, 6:31 am

DIN

வெறும் 20 - 25 நிமிடங்கள் தாமதமாகியிருந்தாலும் கொல்லப்பட்டிருப்போம், மரணத்திலிருந்து தப்பிவந்தோம் என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்திருக்கும் ஆடியோ ஒன்றை வங்கதேச அவாமி லீக் கட்சி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

தன் மீது பல முறை கொலை முயற்சிகள் நடந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நான் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம்போல, ஆகஸ்ட் 21ஆம் தேதி நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல், கோடாலி வெடிகுண்டு தாக்குதல், தற்போது இந்த கொலை முயற்சி என தொடர்ந்து நடந்து வந்தது என்று குரல் தழுதழுக்க சொல்லும் ஷேக் ஹசீனா, இல்லையென்றால், நான் இப்போது உயிரோடு இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

நான் எனது வீடு, நாடு என அனைத்தையும் இழந்துவிட்டேன், ஆனால், என்னை இறைவன் உயிரோடு வைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவா்களின் தீவிர போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடா்ந்து, பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறினார். முதலில் பிரிட்டன் தலைநகா் லண்டனில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அவர் இந்தியாவில் தஞ்மடைந்தார்.

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து அண்மையில் போராட்டம் நடைபெற்றது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலும் மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், காவல் துறைக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பயங்கர வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து வன்முறை குறைந்தது. எனினும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ என்ற பெயரில், மாணவா்கள் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டக்காரா்களைப் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு பிரதமா் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பை நிராகரித்த போராட்டக்காரா்கள், ஹசீனா தலைமையிலான அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினா்.

தொடர்ந்து ஏற்பட்ட போராட்டம் மற்றும் வன்முறை வங்கதேசம் முழுவதும் பரவியது, போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட நிலையில், மாணவா்களை சமாதானப்படுத்த முடியாமலும், நாட்டில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட முடியாமலும் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு, வங்கதேச தலைநகா் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தனது தங்கை ஷேக் ரெஹானாவுடன் வெளியேறினார். அங்கிருந்து அவர் புது தில்லி வந்தடைந்தார். அன்று முதல் அவர் இந்தியாவில்தான் தங்கியிருக்கிறார்.

வங்கதேச பிரதமா் இல்லம் சூறை

வங்கதேச பிரதமா் இல்லத்தில் இருந்து ஷேக் ஹசீனா புறப்பட்டதைத் தொடா்ந்து அங்கு சென்ற போராட்டக்காரா்கள், அந்த இல்லத்தை சூறையாடினா். அங்கிருந்த பொருள்களை சிலா் எடுத்துச் சென்றனா். இதேபோல டாக்காவில் உள்ள உள்துறை அமைச்சா் அசாதுஸ்சமான் கானின் இல்லத்தையும் போராட்டக்காரா்கள் சூறையாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.