கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாளை சூரியன் மறையும்போது எல்லையில் ஊடுருவல் நிற்கும்! டிரம்ப் சூளுரை

அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப், ஆதரவாளர்கள் மத்தியில் உரை...

News image

டொனால்டு டிரம்ப்

AP

Updated On :20 ஜனவரி 2025, 9:50 am

DIN

நாளை சூரியன் மறையும் நேரத்தில் அமெரிக்க எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலும் நிற்கும் என்று அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் 47 ஆவது அதிபராக திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) பதவியேற்கவுள்ளார்.

இதற்கு முன்னதாக வாஷிங்டனுக்கு வருகைதந்த டிரம்ப், கேபிடல் ஒன் அரங்கில் கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெற்றி உரையாற்றினார்.

அப்போது, நாளை சூரியன் மறையும் நேரத்தில் அமெரிக்க எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலும் நிற்கும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசியதாவது:

“வெனிசுலாவில் இருந்து அலைஅலையாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ட்ரென் டி அரகுவா அமைப்பின் உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

அமெரிக்க வரலாற்றில் அதிபரின் மிகச் சிறந்த முதல் நாள் அமைய இருக்கிறது. மிகவும் அசாதாரணமான முதல் 100 நாள்களை மக்களுக்கு வழங்கப் போகிறோம்.

நாடு எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியையும் சரிசெய்வதற்கான பல உத்தரவுகளை இயற்றவுள்ளேன். ஜோ பைடன் வெளியிட்ட பல உத்தரவுகளை ரத்து செய்வேன்.

நாளை நண்பகலில், நான்கு ஆண்டுகால அமெரிக்க வீழ்ச்சிப் பாதை மூடப்படும். வலிமை, செழிப்பு, கண்ணியம் மற்றும் பெருமையின் புத்தம்புதிய காலத்தை அமெரிக்கா தொடங்கும்.

அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, செனட்டர் ராபர்ட் கென்னடி மற்றும் சிவில் உரிமைகள் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பான மீதமுள்ள ஆவணங்களை வெளியிடுவேன்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2017 தேர்தலின்போதும் இதேபோன்ற வாக்குறுதி அளித்த டிரம்ப், கொலைகள் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை மட்டுமே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.