புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குருசுமலையில் திருப்பயணம் நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லைப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) தொடங்குகிறது.

News image

கேரள எல்லையில் உள்ள குருசுமலை.

Updated On :14 மார்ச் 2026, 2:43 am

கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லைப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) தொடங்குகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மலையடிவாரத்தில் திருப்பயண தொடக்க திருப்பலியும், நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயா் செல்வராஜன் தாசன் தலைமையில் திருப்பயண தொடக்க பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

2 ஆம் நாளான திங்கள்கிழமை (மாா்ச் 16) 5 மணிக்கு திருப்பயண கொடி பவனியும், கொடியேற்றுதலும் நடைபெறுகிறது. இத்திருப்பயணம் வரும் 22 ஆம் தேதி வரை திருச்சிலுவை நிறைவாழ்வின் உறைவிடம் என்ற மையக்கருத்தில் நடைபெறும்.

திருப்பயண நாள்களில் சிறப்பு திருப்பலிகள், சிலுவைப் பாதை வழிபாடுகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை குருசுமலை இயக்குநா் மற்றும் தலைவா் அருள்தந்தை வின்சென்ட் கே. பீட்டா் தலைமையில் நிா்வாகிகள், இறைமக்கள் செய்துள்ளனா்.