மார்பகப் புற்றுநோய்க் கட்டிக்கு மருந்து! ஒரே தவணையில்!!

மார்பகப் புற்றுநோய்க் கட்டியை உருவாக்கும் செல்களை ஒரே தவணையில் கொல்லும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது.
புதிய மருந்து
புதிய மருந்து
Published on
Updated on
2 min read

மார்பகத்தில் ஏற்படும் சிறிய புற்றுநோய்க் கட்டிகளைக் கரைக்கும் மற்றும் பெரிய கட்டிகளை சுருக்கும் வல்லமைகொண்ட ஒரே தவணையாகக் கொடுக்கும் மருந்தினை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மருந்துக்கு பக்கவிளைவுகள் இல்லை.

ஏசிஎஸ் மத்திய அறிவியல் என்ற மருத்துவ இதழில், ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரையில், அறிவியல் விஞ்ஞானிகள் இந்த புதிய கண்டுபிடிப்புக் குறித்து தங்களது விவாதங்களை முன்வைத்துள்ளனர்.

அறிவியல் விஞ்ஞானி பால் ஹர்ஜென்ரோதர் மற்றும் சக விஞ்ஞானிகள் குழுவினர், ஏற்கனவே, புற்றுநோய் செல்களைக் கொல்லும் எர்சோ (ErSO) என்ற சிறிய மூலக்கூறினை கண்டறிந்தனர். ஆனால், இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. 2022ஆம் ஆண்டில், ஆய்வாளர்கள், ஒருங்கிணைக்கப்பட்ட எர்சோ போன்றதொரு சிறு மூலக்கூறுகளை வைத்து தொடர்ச்சியாக நடத்திய ஆய்வில், அதிக திறன் கொண்ட சிறுமூலக்கூறுவைக் கண்டறிந்துள்ளனர்.

அந்த ஆய்வின் இறுதியில், எர்சோ-டிஎஃப்பிஒய் (ErSO - TFPy) என்ற ஒரு சிறந்த சிறு மூலக்கூறு உருவாக்கப்பட்டு, அது மார்பகப் புற்றுநோய் கட்டிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்படுவதையும் கண்டறிந்துள்ளனர். மார்பகப் புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்கும் இஆர்+ (ER+) என்ற செல்களை அழிப்பதோடு, அவை பல்கிப் பெருகுவதைக் கட்டுப்படுத்துவதோடு, மிகப்பெரிய அளவிலான பக்கவிளைவுகள் ஏதுமின்றி இருப்பதும் எலி, பூனை, நாய்களிடம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எப்படி செயல்படுகிறது?

ஒரே தவணையில் கொடுக்கப்படும் எர்சோ-டிஎஃப்பிஒய் மருந்தானது, எலிகளுக்கு ஏற்பட்டிருந்த சிறிய மற்றும் பெரிய புற்றுநோய்க் கட்டிகளை கரைக்கிறது.

இதர சிகிச்சைகளைப் போல அல்லாமல், இது பக்கவிளைவுகள் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மேலும், இந்த மருந்தினை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதும், ஒரே தவணை மருந்தே போதுமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்பகப் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் இதர மருந்துகள் பலவும், அதிக நாள்கள் உட்கொள்ள வேண்டியதாக இருக்கின்றன. ஒரே தவணையில் எடுத்துக் கொள்ளப்படும் எர்சோ-டிஎஃப்பிஒய் மருந்து மற்றும் உடல் சுழற்சியைக் குறைப்பது போன்றவை அதிக பக்கவிளைவுகள் இல்லாமல் காக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த மருந்து மீது இன்னும் ஏராளமான ஆய்வகச் சோதனைகள் நடத்தப்பட்டு, இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் பலனளிப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், அவை நிறைவுபெற்று, மனித நோயாளிகளுக்கு எர்சோ-டிஎஃப்பிஒய் மருந்து செலுத்தப்படும்போது, மார்பகப் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிரான ஒருசில சிகிச்சையாக இது இருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஈஸ்ட்ரோஜன் ரெசப்ட்ரஸ் (இஆர்) எனப்படும் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளால் ஏற்படுவதே மார்பகப் புற்றுநோய் கட்டிகள். புரதங்களால் பிணைக்கப்பட்ட ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களே ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகள். இவை அபரிமிதமான செல் வளர்ச்சியைத் தூண்டக்கூடியது.

வழக்கமான மருத்துவ சிகிச்சை

தற்போது மார்பகப் புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை, கீமோதெரபி, ரேடியோதெரபி, ஹார்மோன் சிகிச்சை என வழங்கப்படுகிறது. பலரும் அறுவைசிகிச்சையிலிருந்துதான் தொடங்குகிறார்கள். புற்றுநோய் செல்களை அழிக்க தற்போது ரேடியோதெரபி அதிகம் வழங்கப்படுகிறது. அதில்லாமல், புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்துகளும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

பக்கவிளைவுகள்

புற்றுநோய் சிகிச்சையில் ஏராளமான பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அறுவைசிகிச்சை என்றால் வலி, வீக்கம் போன்றவையும், கீமோதெரபியால் மயக்கம், தலைமுடி உதிர்தல், நரம்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ரேடியோதெரபியால் தோல் பிரச்னைகள், வீக்கம், மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com