உக்ரைன் - ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது 2022 ஆம் ஆண்டில் ரஷியா போர் தொடுத்ததால், ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் உள்பட நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், ரஷியாவின் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும், சில நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெயை விற்பதன் மூலம் வருவாய் ஈட்டி, அதனை போர் நிதிக்காக ரஷியா செலவு செய்து வருகிறது. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா, சீனாவும் அடங்கும்.
இந்த நிலையில், உலகளவில் அதிகப்படியான கச்சா எண்ணெயை விற்பனை செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக்-கிடம் (OPEC), கச்சா எண்ணெயின் விலையைக் குறைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: அமேசானில் 1,700 பேர் பணிநீக்கம்! ஏன்?
உலகளவில் 38 சதவிகித கச்சா எண்ணெயை ஓபெக் கூட்டமைப்பு நாடுகள்தான் உற்பத்தி செய்கின்றன. அதுமட்டுமின்றி, இந்த நாடுகளிடம்தான் 79.5 சதவிகித கச்சா எண்ணெய் வளமிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பில், நிலையானதாக இல்லாமல் ஆண்டுதோறும் நாடுகள் மாறுபடும்.
2024 ஆம் ஆண்டின்படி, தற்போது குவைத், சௌதி அரேபியா, காங்கோ, ஐக்கிய அமீரகம், ஈரான், ஈராக், கயானா, லிபியா, வெனிசுலா, காபன், அல்ஜீரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் கச்சா எண்ணெயின் விலையைக் குறைத்தால், ரஷியா எண்ணெய் விற்பனை பாதிக்கும். இதனால், ரஷியாவின் போருக்கு நிதி பற்றாக்குறை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரைத் தடுக்க உலகளவில் முயற்சிகள் நடந்து வருகின்றன. டொனால்ட் டிரம்ப்பும், தான் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அதிபர் தேர்தலின்போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜனவரி 20 ஆம் தேதியில் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்ப், உக்ரைன் - ரஷியா போரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவறாக நடந்துகொண்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்கள் தொடங்கும்: டிரம்ப் எச்சரிக்கை

ஈரானுக்கு சீனா அளித்த ‘பரிசை’ கைப்பற்றியது அமெரிக்கா! எதைச் சொல்கிறார் டிரம்ப்?
முடியும் தறுவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்

விரைவில் வெளியேறுவோம்; ஈரான் போருக்கு 2, 3 வாரங்களில் தீர்வு! - டிரம்ப்
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


