டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு!சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக! - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார்!மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ரஷியத் தாக்குதல்கள் பற்றி நட்பு நாடுகள் முன் எச்சரிக்கை எதுவும் வழங்கவில்லை: ஸெலென்ஸ்கி

உக்ரைனில் உள்ள எரிசக்தி மையங்களைக் குறிவைத்து ரஷியா நடத்தவிருந்த ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றி நட்பு நாடுகள் முன் எச்சரிக்கை எதுவும் வழங்கவில்லை என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

Ukraine's President Volodymyr Zelenskyy

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி - படம் - ஏபி

Updated On :

உக்ரைனில் உள்ள எரிசக்தி மையங்களைக் குறிவைத்து ரஷியா நடத்தவிருந்த ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றி நட்பு நாடுகள் முன் எச்சரிக்கை எதுவும் வழங்கவில்லை என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் மீது 16 ஏவுகணைகள், 200-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறினார். அவர் இதுதொடர்பான சமூக ஊடகப் பதிவில், “நேற்று இரவு மீண்டும் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எங்களின் நட்பு நாடுகளிடமிருந்து இதுபற்றி எந்த முன் எச்சரிக்கையும் வரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, கடந்த வாரமும் ரஷியத் தாக்குதல்கள் பற்றி அமெரிக்காவிடமிருந்து எந்த எச்சரிக்கையும் வரவில்லை என்று உக்ரைன் கூறியிருந்தது. இதனால், அப்பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய நேரம் இருக்கவில்லை என உக்ரைன் குற்றச்சாட்டு வைத்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று பேசுகையில், உக்ரைனுடன் உளவுத் தகவல்களைப் பகிர்வதில் எந்தத் தடங்கலும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், உக்ரைனின் குற்றச்சாட்டுகள் பற்றி அவரிடம் கேட்டபோது, “ரஷியாவுடனான போரை நிறுத்துவதில் ஸெலென்ஸ்கி அதிக கவனம் செலுத்தவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

சமீபத்தில் உக்ரைன் - அமெரிக்கா இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “ரஷியா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஸெலென்ஸ்கிக்கு அதில் அக்கறை இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், அவருக்கு ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு, போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அவருக்கு விருப்பமில்லை. அவர் ஒருபோதும் அதனை விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துப் பதிவிட்ட ஸெலென்ஸ்கி, "உக்ரைன் இந்தப் போரை ஒருபோதும் விரும்பவில்லை. இந்தப் போரை ஒரு கண்ணியமான விதத்தில் முடிவுக்குக் கொண்டுவர எங்கள் நட்பு நாடுகள் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் வரவேற்றுள்ளோம். பேச்சுவார்த்தையில் ரஷியாவின் பதில் மீண்டும் மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் படுகொலைகளாகவே இருந்து வருகிறது" என்று குறிப்பிட்டார்.

Summary

Ukrainian President Zelensky said that allies had given no advance warning of Russia's planned missile strikes on energy centers in Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.